யாழ். இ.போ.ச. நிர்வாகத்தால் பணி நீக்கம் செய்யப்பட்டவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை! (படம்)

யாழ்ப்பாணத்தில் ரயில் முன் பாய்ந்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார். காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு தபால் ரயில் முன் பாய்ந்தே குறித்த இளைஞன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இச் சம்பவம் இன்று(05) மாலை 6.45 மணியளவில் ஸ்ரான்லி வீதிக்கும், பலாலி வீதி ஆரியகுளம் பகுதிக்குமான இடையில், யாழ்ப்பாணம் ரயில் நிலையத்திற்கு அண்மித்த ரயில் கடவையில் இடம்பெற்றுள்ளது.

சங்கானையைச் சேர்ந்த சுரேஸ் (வயது-35) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர் இலங்கை போக்குவரத்துச் சேவை (சி.ரி.பி.) பேருந்து நிலையத்தில் பாதுகாப்பு உத்தியோத்தகராகக் கடமையாற்றி வந்துள்ளார். கடந்த வாரம் மதுபோதையில் பணிக்கு வந்தபோது நிர்வாகத்தினரால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

நேற்றும் (05) தற்கொலைக்கு முயற்சித்தபோது நண்பர்கள் அவரை தடுத்துக் காப்பாற்றியுள்ளனர்.

இந்த நிலையிலேயே இன்று வெள்ளிக்கிழமை மாலை மதுபோதையில் ரயில் கடவையில் படுத்து தற்கொலை செய்துள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


Previous Post Next Post