எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த அரச பேருந்து கம்பஹா மாவட்டம் சீதுவைப் பகுதியில் வழிமறிக்கப்பட்டு ஆறு பேர் ஏற்றப்பட்டிருக்கின்றனர்.
அவர்கள் யாழ்ப்பாணத்தை வந்தடைந்த நிலையில் பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் தமது டிப்போவின் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில் அவர்கள் இருவரும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, பேருந்தில் வந்த ஆறு பேர் மற்றும் பேருந்தில் பயணித்த ஏனையவர்கள் தொடர்பிலான தரவுகளைத் திரட்டும் நடவடிக்கையும் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் தரப்பினால் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் தெரியவருகிறது.
கம்பஹா மாவட்டம் முழுமையான ஊரடங்கு நடைமுறையில் உள்ளமையால் அந்த மாவட்டத்திலிருந்து மக்கள் வெளியேறுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுவரும் சூழலில் அவர்கள் ஆறு பேரும் கம்பஹா மாவட்டம் சீதுவை பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் வந்ததாக சொல்லப்படுவதால் சுகாதார மற்றும் பாதுகாப்புத் தரப்பினர் கூடிய அக்கறை கொண்டு செயற்படுவதாகவும் தெரியவருகிறது.