எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
நபர் ஒருவரின் மோசமான தாக்குதலில் நான்கு சிறுவர்கள் உட்பட ஐந்து பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். மேலும் ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.
அவர்களில் மூவர் ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. உயிரிழந்த அனைவரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிகிறது.
இன்று பகல் நிகழ்ந்த இக் குடும்பப் படுகொலைகள் தொடர்பில் வெளியான தகவல்கள் வருமாறு :
Rue Emmanuel Arago தெருவில் உள்ள வீடொன்றில் உயிரிழந்தவர்களது மாமனார் என்று கூறப்படும் ஆண் ஒருவர் கத்தி மற்றும் சுத்தியல் கொண்டு வெறித்தனமாகப் பலரைத் தாக்கி உள்ளார் என்று கூறப்படுகிறது.
அவரது பிடியில் இருந்து தப்பியோடிய இளைஞர் ஒருவர் அருகே உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இத்தகவலைத் தெரிவித்திருக்கிறார். அதனையடுத்து பொலீஸாரும் அவசர சேவையினரும் அங்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
மூன்று மாடிகள் கொண்ட வீட்டின் கதவை உடைத்து உள் நுழைந்த பொலீஸார் அங்கே கோரமான காட்சிகளைக் கண்டுள்ளனர். குழந்தைகள் உட்பட ஜவர் இரத்த வெள்ளத்தில் சடலங்களாகக் காணப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்திய நபரும் கோமா நிலையில் மீட்கப்பட்டார் எனத் தெரிகிறது. அவருக்கு அருகே, கத்தி, சுத்தியல் என்பன காணப்பட்டுள்ளன.
தேசிய மற்றும் நகரப் பொலீஸாரால் சம்பவம் நடந்த பகுதி உடனடியாக மூடப்பட்டு வெளியாட்கள் செல்வது தடுக்கப்பட்டுள்ளது. பஸ் மற்றும் வாகனப் போக்குவரத்துகள் மாற்று வழிகளில் திசை திருப்பப்பட்டுள்ளன.
Au moins 5 morts dont plusieurs enfants à Noisy-Le-Sec. La piste privilégiée est celle du drame familial.
— Remy Buisine (@RemyBuisine) October 3, 2020
Il y a également plusieurs blessés dans un état grave dont l’auteur présumé des faits. pic.twitter.com/h7laWLHtNA