பருத்தித்துறை, மந்திகை ஆதார வைத்தியசாலையில் கோவிட்-19 நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்ற 34 வயதுடைய பெண் ஒருவர் உள்பட இருவர் இன்று உயிரிழந்துள்ளனர்.
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 34 வயதுடைய பெண் ஒருவரும் கம்பர்மலையைச் சேர்ந்த 51 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்தனர் என்று மந்திகை ஆதார மருத்துவமனை தகவல்கள் தெரிவித்தன.
இதவேளை, யாழ்ப்பாணத்தில் நேற்று வெள்ளிக்கிழமை 163 கோவிட்-19 நோய்த்தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அத்துடன் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் மூவர் உள்பட ஐந்து பேர் நேற்று உயிழந்தனர் என்று அறிக்கையிடப்பட்டது.
இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட்-19 நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 231ஆக உயர்வடைந்துள்ளது.