யாழில் இளம் ஊடகவியலாளர் கொரோனாத் தொற்றினால் உயிரிழப்பு!


சமூக ஊடகப் போராளி ஞானப்பிரகாசம் பிரகாஷ் (வயது 26) இன்று மாலை காலமானார்.

கொடிகாமத்தை சேர்ந்த பிரகாஷ் , சுயாதீன ஊடகவியலாளராக யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் பத்திரிகைகளுக்கு கட்டுரைகள் , செய்திகள் எழுதி வந்ததுடன் , உள்நாட்டு, வெளிநாட்டு இணையத்தளங்களும் செய்திகளை கட்டுரைகளை எழுதி வந்தார்.

அவருக்கு கோவிட்-19 நோய்த்தொற்றுள்ளதாக நேற்று முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் அறிக்கையிடப்பட்டது.

இந்த நிலையில் திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையிர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.

இவர் தனது ஏழாவது வயதில் தசைத்திறன் குறைபாடு (Muscular Dystrophy) நோயினால் பாதிக்கப்படதால் நடக்க முடியாத நிலை ஏற்பட்டது. அவற்றை எல்லாம் தாண்டியும் அவர் ஊடக துறையில் தனக்கொன்று ஒரு இடத்தினை தக்க வைத்திருந்தவர்.

ஊடகவியலாளர் ஞானப்பிரகாசம் பிரகாஸூக்கு முகநூலில் பலரையும் ஒருங்கிணைத்து அநீதிக்கு எதிரான போராட்டங்களை நடத்தியவர் என்பதைப் பாராட்டி மாமனிதர் ரவிராஜ் ஞாபகார்த்தமான “சமூக ஊடகங்கள் மூலம் ஒருங்கிணைப்பு செயற்பாடு விருது” வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

2019ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் திகதி இடம்பெற்ற மாமனிதர் நடராஜா ரவிராஜின் 13ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வில் வழங்கிவைக்கப்பட்டது.

ஊடகவியலாளர் ஞானப்பிரகாசம் பிரகாஷ், சமூக ஊடகங்களில் மக்களுக்கு பயனுள்ளதான விடயங்களைப் பகதிர்வதிலும் தனது இறுதிமூச்சுவரை பணியாகக் கொண்டிருந்தார்.
பிரகாஷின் இறுதிப் பதிவு
 
Previous Post Next Post