அதிகாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மீது கடந்த ஆறாம் திகதி இனந்தெரியாதோர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர் என செய்தி வெளியாகியிருந்தது.
அந்த வகையில் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் ஐந்து பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
அக்குரஸ்ஸ, திட்பட்டுவாவயில் இடம்பெற்ற இத் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு பொலிஸார் காயமடைந்திருந்தனர்.
இலக்கத் தகடு அற்ற மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை தடுத்து நிறுத்த முற்பட்டபோது அவர்கள் நிற்காது சென்றதனால் இரு பொலிஸார் அவர்களை துரத்திச் சென்றபோதே இத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தீவிரமாக விசாரணை செய்தபோது, ஐவர் கைது
செய்யப்பட்டதுடன், அதில் இருவர் இராணுவத்தினர் எனத் தெரிய வந்துள்ளது. அவர்களிடமிருந்து இரு ரி-56 ரக துப்பாக்கிகளும் மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள் அண்மையில் பாணந்துறை வடக்குப் பொலிஸ் நிலையத்திலிருந்து காணாமல் போனதாக இருக்கலாம் என நம்பப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தொடர்புபட்ட செய்தி:-
பேருந்துக்குள் ஒருவர் சுட்டுக் கொலை! பொலிஸார் மீதும் துப்பாக்கிச் சூடு!!