வவுனியாவுக்கு சஜித் வருகை! மர்மப் பொதியால் பரபரப்பு!! நடந்தது என்ன? (படங்கள்)

வவுனியாவில் வீதியோரமாக வைக்கப்பட்டிருந்த மர்மப் பொதியாப் அப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது.

நேற்று இரவு 7.30 மணியளவில் குருமன்காட்டுச் சந்தியில் நிறுத்தப்பட்டிருந்த ஹயஸ் ரக வாகனத்தில் பயணித்த சிலர் மர்ம பொதி ஒன்றினை வீதி ஓரத்தில் வைத்து விட்டுச் சென்றுள்ளனர்.

இதனால் சந்தேகம் அடைந்த அப் பகுதி மக்கள், அவசர பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர். சம்பவ இடத்தக்கு விரைந்த பொலிஸார் குறித்த பொதியினைச் சோதனை செய்து பார்த்தபோது, அதனுள் கழிவுப் பொருட்கள் இருந்துள்ளன.

சம்பவம் தொடர்பாக அருகில் இருந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவைப் பார்வையிட்டபோது, ஹயஸ் வாகனத்தில் வந்தவர்கள் அந்தப் பொதியினை வீதி ஓரத்தில் போட்டு விட்டுச் சென்றது தெரிய வந்தது.

இதேவேளை ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவின் பங்கேட்புடன் பிரசாரக் கூட்டம் வவுனியா வைரவபுளியங்குளத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 




Previous Post Next Post