மீண்டும் பூமிக்குள் புதைக்கப்பட்டான் குழந்தை சுர்ஜித்! (படங்கள்)

திருச்சியில் ஆழ்துளைக் கிணற்றுக்குள் கடந்த 25 ஆம் திகதி விழுந்த சுர்ஜித் என்ற இரண்டு வயதுச் சிறுவன் இன்று அதிகாலை சடலமாக மீட்கப்பட்டான்.

அவனது உடல் தற்போது மணப்பாறையை அடுத்த பாத்திமாபுதூர் கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அதிகாலை 4.30 மணியளவில் ஆழ்துளை கிணற்றுக்குள் இருந்து மீட்கப்பட்ட குழந்தையின் உடல், மணப்பாறை அரச மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுப் பின்னர் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதன் பின்னர் மணப்பாறையை அடுத்த பாத்திமாபுதூர் கல்லறையில் குழந்தை சுர்ஜித்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் குழந்தையின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

குழந்தை விழுந்த ஆழ்துளைக் கிணறு மற்றும் மீட்புப் பணிக்காகத் தோண்டப்பட்ட குழி ஆகியவை சீமெந்துக் கலவையினால் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


Previous Post Next Post