
இச் சம்பவம் தொடர்பில் தொடர் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் பொலிஸார் விசாரணை நடத்தியதில், தானே தனிநபராக நின்று இக் கொலையைச் செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த ஆட்டோ சாரதியின் கழுத்தில் இருந்த சங்கிலி மற்றும் மோதிரத்திற்காகவே தான் இக் கொலையைச் செய்தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே 07 ஆம் திகதி இக் கொலையைச் செய்யத் திட்டமிடப்பட்டு நெடுங்கேணிக்கு அழைத்துச் சென்றதாகவும் எனினும் அன்றைய தினம் கொலை செய்ய முடியாமல் போய் விட்டதாகவும் அவர் பொலிஸ் விசாரணைகளில் தெரிவித்துள்ளார்.
இதேவளை தவறான தொடர்பு ஒன்றினால் ஏற்பட்ட முரண்பாட்டில் இக் கொலை இடம்பெற்றுள்ளதா என்பது தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.