பிரான்ஸில் கணவரின் தாக்குதலில் அலறும் ஈழத்துப் பெண்! (வீடியோ)

வெளிநாட்டு மோகத்தால் மூழ்கிக் கிடக்கும் இலங்கைத் தமிழ் பெண்களுக்கான செய்தியாகவே இது உள்ளது.

அதேநேரம் எனது மகளை லண்டனில் திருமணம் செய்து வைத்துள்ளோம், பிரான்ஸில் திருமணம் செய்து வைத்துள்ளோம் என பெருமைப்படுத்திக் கொள்ளும் பெற்றோர்களுக்கும் இது சமர்ப்பணமாகவே அமைகின்றது.

தாங்கள் பெருமையாக மார்தட்டிக் கொள்வதற்காக பெண் பிள்ளைகளை யார் என்று தெரியாத, வயது வித்தியாசம் கூட பார்க்காது வெளிநாட்டு நபர் ஒருவருக்கு திருமணம் செய்து வைக்கின்றனர்.

இறுதியில் குறித்த பெண்ணைப் போன்று எத்தனையோ ஈழத்துப் பெண்கள் இவ்வாறு வெளிநாடுகளில் சித்திரவதைப்படுகின்றனர் என்பது யாருக்குத் தெரியும்? அதனை உணர்த்தும் விதமாகத்தான் பிரான்ஸிலிருந்து ஒரு காணொளி வெளியாகியுள்ளது.

அதில் மட்டக்களப்பைச் சேர்ந்த பெண் ஒருவர் பிரான்ஸைச் சேர்ந்த நபரொருவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார். அந்தப் பெண்ணுக்கு அந் நாட்டில் கணவனைத் தவிர வேறு யாரையும் தெரியாது.

இந் நிலையில் கணவன் ஒவ்வொரு நாளும் குடித்து விட்டு சந்தேகப்பட்டு அந்தப் பெண்ணை சித்திரவதை செய்து வருகின்றார்.

இது தொடர்பான காணொளி கீழே இணைக்கப்பட்டுள்ளது.



Previous Post Next Post