பெண் மருத்துவரைக் கொலை செய்த 4 பேரும் சுட்டுக்கொலை!(வீடியோ)

இந்தியா ஜதராபாத்தில் கால்நடை பெண் மருத்துவர் பாலியல் துஷ்பிரயோகத்தின் பின்னர் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என 4 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந் நிலையில் சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு குறித்த நான்கு பேரையும் அழைத்துச் சென்ற பொலிஸார், குற்றம் எவ்வாறு நடந்தது என நடித்துக் காட்டுமாறு கூறியுள்ளனர்.

ஆனால் நான்கு பேரும் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றால் அவர்களை பொலிஸார் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துள்ளனர்.

கடந்த 27 ஆம் திகதி தெலுங்கானாவில் பணி முடிந்து வீடு திரும்பிய பெண் மருத்துவருக்கு உதவி செய்வது போல் பாசாங்கு காட்டி அவரைக் கடத்திச் சென்று பலாத்காரம் செய்த பின்னர் எரியூட்டிக் கொலை செய்யப்பட்டிருந்தார்.

இச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கடந்த 29 ஆம் திகதி நான்கு பேரை பொலிஸார் கைது செய்திருந்தனர். அவர்களே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.





Previous Post Next Post