நல்லூர் பிரதேச சபையின் மாதாந்த சபைக் கூட்டத்தில் உப தவிசாளரின் கருத்துக்குப் பல உறுப்பினர்கள் எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளனர்.
அதாவது அண்மையில் பெய்த கன மழையினை அடுத்து வெள்ளப் பாதிப்புக்களுக்குள்ளான பகுதிகளில் நடவடிக்கை எடுக்குமாறு கடந்த 6 தினங்களுக்கு முன் உறுப்பினர்களால் சபையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இருந்தும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்று குற்றஞ்சாட்டிய உறுப்பினர்கள், வெள்ள நீர் வற்றி பின்னர் வெள்ளப் பாதிப்புக்கு நடவடிக்கை எடுப்போமென சபையின் உப தவிசாளர் தெரிவித்த கருத்துக்குக் கடும் எதிர்ப்பினை வெளியிட்டனர்.
உப தவிசாளரின் கருத்துக்குப் பல உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் க.திருஞானராஜா, தற்போது தேங்கி நின்ற வெள்ள நீர் பெரும்பாலும் வற்றி விட்ட நிலையில் அன்று எனது கோரிக்கைக்கு செவிமடுக்காமல் தற்போது அனைவரும் நேரில் சென்று வெள்ளப் பாதிப்பைப் பார்ப்போம் என உபதவிசாளர் தெரிவித்திருப்பது என்னை முட்டாளாக்கும் செயற்பாடாகவே நான் கருதுகிறேன் என கடுமையாகச் சாடினார்.