பிரபல நாட்டுப்புற பாடகரும் திரைப்படப் பாடகருமான புஷ்பவனம் குப்புசாமியின் மகள் காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகம், சென்னை ராஜா அண்ணாமலைபுரம் விஸ்வநாதன் தெருவில் குடும்பத்தோடு வசித்து வருகின்றார் குப்புசாமி.
இந் நிலையில் இன்று குப்புசாமியின் உறவினர் கவுசிக் என்பவர் அபிராமபுரம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். அதில் புஷ்பவனம் குப்புசாமியின் மகள் மருத்துவர் பல்லவி திடீரெனக் காணாமல் போய்விட்டார்.
சகோதரிக்கும் அவருக்கும் இடையில் நேற்றிரவு சண்டை நடந்துள்ளது. அதனால் கோபத்துடன் பல்லவி காரை எடுத்துச் சென்றவர் பிறகு வீடு திரும்பவில்லை.
எங்கு சென்றார் என்ற விபரம் தெரியவில்லை என பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நன்றி : நியூஸ் 7