யாழ்ப்பாணம் இருபாலை மடத்தடிப் பகுதியில் சிறுவன் ஒருவரின் சடலம் கிணற்றிலிருந்து நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது.
வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த வசந்தகுமார் ரியாஸ் என்ற ஆறு வயதுச் சிறுவனின் சடலமே இவ்வாறு கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், சித்தி வீட்டுக்குச் சென்று விளையாடப் போகின்றேன் என்று தனது தாயிடம் கேட்டுள்ளார்.
எனினும் தாயார் அதற்கு மறுப்புத் தெரிவித்த நிலையில் வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்தான்.
மாலை 5 மணிக்குச் சிறுவனின் பேத்தியார் சிறுவனைத் தேடியபோது கிணற்றில் சிறுவன் விழுந்தது தெரிய வந்தது.
சிறுவனின் உடல் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போது, சிறுவன் ஏற்கனவே உயிரிழந்தது தெரிய வந்தது.