தவறுதலாக சுடுநீர் ஊற்றப்பட்டு எரிகாயங்களுக்குள்ளான ஒரு வயதுக் குழந்தை உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மேசையின் விளிம்பில் வைக்கப்பட்டிருந்த சுடுநீர் பாத்திரத்தை குழந்தை தட்டியதிலேயே குழந்தையின் உடலில் சுடுநீர் ஊற்றப்பட்டது.
இவ்வாறு எரிகாயங்களுக்குள்ளான குழந்தை யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்துள்ளதாக காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
நல்லிணக்கபுரம் கீரிமலைப் பகுதியைச் சேர்ந்த கஜீபன் சகாஸ் என்ற ஒரு வயது நிரம்பிய ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்தது.
கடந்த 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை குழந்தைக்குப் பால் கரைப்பதற்காக சுடுநீரை தயாரித்த தாய் அப் பாத்திரத்தை மேசையின் விளிம்பில் வைத்து விட்டு பால்மா பெட்டியை எடுக்க அறைக்குள் சென்றுள்ளார்.
இந் நிலையில் குழந்தை மேசை விரிப்பு சீலையை இழுத்துள்ளது. இதனால் விளம்பில் வைக்கப்பட்ட சுடுநீர் பத்திரம் குழந்தை மீது விழுந்துள்ளது.
உடனடியாக குழந்தையை தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுப் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தது.
எனினும் நேற்று முன்தினம் (27) குழந்தை உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.