கிளிநொச்சி பளை-கரந்தாய்ப் பகுதியில் கொழும்பிலிருந்து சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களும் உயிரிழந்தள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இவ் விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளைப் பளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.