ஓரினச் சேர்க்கைக்கு வற்புறுத்தியபோதும் உடன்படவில்லை என்பதற்காக 12 வயதுச் சிறுவன் ஒருவன் கொலை செய்யப்பட்டுக் குப்பைத் தொட்டிக்குள் வீசப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் திருச்சி அரியமங்கலம் மேல அம்பிகாபுரம் அண்ணா நகர்ப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
அதே பகுதியைச் சேர்ந்த அலியார் அப்துல் (வயது-12) என்ற சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார்.
5 ஆம் வகுப்புப் படித்து வரும் சிறுவன், கடந்த 3 ஆம் திகதி முதல் வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகின்றது. தனது மகனைக் காணவில்லை என்பது குறித்து சிறுவனின் தந்தையால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.
பொலிஸாரின் விசாரணைகளில், சிறுவன் அப் பகுதியைச் சேர்ந்த ரவுடி சேகரின் மகன் இளவரசன் உள்ளிட்ட சிலருடன் சுற்றித் திருந்தது தெரிய வந்தது.
இதனால் சந்தேகத்தின் அடிப்படையில் இளவரசன், சரவணன், லோகேஷ், வீராச்சாமி உள்ளிட்டோரிடம் பொலிஸார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அப்துலை, இளவரனும் இன்னும் சிலரும் சேர்ந்து ஓரினச் சேர்க்கைக்கு வற்புறுத்தியுள்ளனர் என்பது தெரிய வந்தது.
இந் நிலையில் குறித்த சிறுவன் அதற்கு உடன்படவில்லை என்பதற்காக இளவரசனும் அவரது நண்பர்களும் சிறுவனைத் தாக்கியுள்ளனர்.
இத் தாக்குதலில் சிறுவன் உயிரிழந்துள்ளார். இதைத் தொடர்ந்து அப்துல் உடலை அப் பகுதியிலிருக்கும் குப்பைத் தொட்டி ஒன்றில் தூக்கி வீசியுள்ளனர்.
இத் தகவலின் அடிப்படையில் குப்பைத் தொட்டிக்குள் இருந்து சிறுவனின் உடல் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ள பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.