யாழ்ப்பாணத்தில் அதிகரித்துச் செல்லும் டெங்கு நோயினைக் கட்டுப்படுத்துவதற்கு காரைநகர் இளைஞர்கள் களத்தில் இறங்கி தமது பிரதேசத்தை தூய்மைப்படுத்தியுள்ளனர்.
காரைநகர் ஆதார வைத்தியசாலை முன்பாக ஆரம்பித்து மேற்கு பிரதான வீதியின் இரு மருங்கிலும் இருந்த கொள்கலன்கள், பொலித்தீன்கள் மற்றும் குப்பைகளை அகற்றியுள்ளனர்.
பிரதேச சபையின் கழிவகற்றும் வாகனத்தைப் பயன்படுத்தி இச் சிரமதானப் பணிகளில் அப் பகுதி இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கான கையுறைகளை சுகாதாரத் திணைக்களம் வழங்கியிருந்தது.
இதேவேளை வீதியோரங்களில் பொதுமக்கள் எவ்வித கழிவுப் பொருட்களையும் போட வேண்டாம் என சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை கேட்டுக் கொண்டுள்ளது.