யாழ்.மாநகர சபையால் யாழ்ப்பாண நகரில் வியாபார சிற்றங்காடித் தொகுதி அமைக்கப்பட்டு, நடைபாதை வியாபாரிகளுக்கென வழங்கப்பட்டுள்ளது.
இதற்காக நாளுக்கு 250 ரூபாய் வீதம் யாழ்ப்பாண மாநகர சபை கட்டணமாக அறவிடுகின்றது. இந் நிலையில் இச் சிற்றங்காடியில் பணிபுரிவோர் முதல் கொண்டு சுமார் 150 ற்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்.
இவர்களுக்கென மலசலகூட வசதி மற்றும் குடிநீர் வசதிகள் யாழ்.மாநகர சபையால் செய்து கொடுக்கப்படவில்லை என விபாயாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந் நிலையில் மலசலகூடம் அமைப்பதெற்கென ஒதுக்கப்பட்டிருந்த இடத்திலும் தற்போது கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இக் கடைகள் நேற்று இரவோடு இரவாக அமைக்கப்பட்டு தனி நபர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாக அங்கு வியாபார நிலையங்கள் நடாத்தும் வியாபாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அத்துடன் ஒரு கடைக்கு 5 அடி நீளம் என வரையறை செய்யப்பட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட நிலையில் குறித்த கடைக்கு 8 அடி நீளம் வழங்கப்பட்டுள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இக் கடைகளை முன்னாள் போராளிகளுக்கு வழங்கத் தீர்மானித்திருப்பதாக யாழ்.மாநகர சபை தெரிவித்தையடுத்து அதற்கு தாங்கள் ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாகத் தெரிவித்த வியாபாரிகள், ஆனால் தற்போது இக் கடைகள் அவர்களுக்கு வழங்கியதுபோல் தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.