யாழ்ப்பாணம் பலாலி இராணுவ முகாமில் விமானப் படையில் பணியாற்றும் அதிகாரியை வழிமறித்து கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த அதிகாரி தனது குடும்பத்துடன் சொந்த ஊரான பொலநறுவைக்குச் செல்வதற்காக இன்று அதிகாலை ஆட்டோ ஒன்றில் யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துள்ளார்.
இதன் போது ஊரெழுப் பகுதியில் வைத்து இடைமறித்த முகமூடி அணிந்த மர்மக் கும்பல் அவர்களிடமிருந்து நகை, பணம் போன்றவற்றைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.