தீவிரமடையும் மக்கள் போராட்டம்! போக்குவரத்துக்கள் பாதிப்பு!! (படங்கள்)

பிரான்ஸில் மக்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ளன.

டீசலுக்கு வழங்கப்படும் மானியத்தை அரசாங்கம் குறைத்துள்ளதை எதிர்த்து பிரான்ஸில் 10 பிராந்தியங்களில் வீதிகளை மறித்து லொறிச் சாரதிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஓய்வூதியச் சீர்திருத்தத்துக்கு எதிரான போராட்டத்தில் ரயில் போக்குவரத்துச் சேவைகள் ஏற்கனவே ஸ்தம்பிதமடைந்துள்ளன.

இந் நிலையில் டீசலுக்கான வரிச் சலுகை குறைக்கப்படுவதைக் கண்டித்து வீதிகளை மறித்து லொறி ஓட்டுநர்களும் போராட்டத்தில் குதித்துள்ளதால் பொதுப் போக்குவரத்துச் சேவைகள் பிரான்ஸில் முடங்கியுள்ளன.

டீசலுக்கு வழங்கப்படும் அரசின் மானியக் குறைப்பை எதிர்த்து நேற்றுச் சனிக்கிழமை பிரான்ஸைச் சுற்றியுள்ள சுமார் 10 பிராந்தியங்களில் வீதிகளை மறித்து லொறிகளை நிறுத்தி போராட்டம் இடம்பெற்றது.

பாரிஸில் குடியிருப்புக்கள் நிறைந்த இடது கரை டென்ஃபெர்ட் ரோச்செரூ பகுதியில் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் கூடி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சில இடங்களில் பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் மோத்லகளும் இடம்பெற்றுள்ளன.



Previous Post Next Post