மண்டைதீவில் நடந்த வாசிப்பு மாத இறுதி நிகழ்வுகள்! (படங்கள்)

வேலணை பிரதேச சபையின் மண்டைதீவு உப அலுவலக பொது நூலகத்தின் ஏற்பாட்டில் வாசிப்பு மாத இறுதி நிகழ்வுகள் நடாத்தப்பட்டன.

கடந்த 10.12.2019 ஆம் திகதி காலை 10 மணியளவில் மண்டைதீவு மகா வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் மண்டைதீவுப் பிரதேசத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கிடையில் போட்டிகள் நடாத்தப்பட்டு வெற்றியீட்டிய மாணவர்களுக்குப் பரிசில்கள் வழங்கப்பட்டது.

இப் பரிசில்களுக்கான தொகையினை கனடாவில் வசிக்கும் மண்டைதீவைச் சேர்ந்த சிற்றம்பலம் ஜெயசிங்கம் அவர்கள் வழங்கியிருந்தார்.

இதேவேளை மண்டைதீவுப் பகுதியில் உள்ள எழுத்தாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கான நினைவுப் பரிசில்களும் வழங்கப்பட்டன.

















Previous Post Next Post