கடலில் குளிக்கச் சென்ற தந்தையும் மகனும் உயிரிழந்த சம்பவம் ஒன்று முல்லைத்தீவுப் பகுதியில் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு நாயாறு கடலில் நீராடிச் சென்ற தென்பகுதியைச் சேர்ந்த தந்தையும் மகனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
தற்போது தந்தையின் சடலம் மீட்கப்பட்டு முல்லைத்தீவு பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மகனின் சடலத்தைத் தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,
முல்லைத்தீவு இராணுவ முகாமில் கடமையாற்றும் உறவினரைப் பார்ப்பதற்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய், மகன் ஆகியோர் சென்ற நிலையில் இன்று பிற்பகல் கடலில் குறிக்கச் சென்ற போது கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் கெலனிய-பலுகம ரக்கன் தலுவ வீதியில் வசித்து வந்த வருண கமகே (வயது-55) மற்றும் அவரது மகனான லபிது கமகே (வயது-16) ஆகிய இருவருமே நீரில் மூழ்கி பலியாகினர்.