தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் தோற்றும் மாணவன் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
வவுனியா சிதம்பரபுரம் வன்னிக்கோட்டம் பகுதியில் இன்று காலை இவ் விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வவுனியாவிலிருந்து சிதம்பரபுரம் நோக்கிச் சென்ற தனியார் பேருந்தும், மாணவன் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று மோதியதிலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆச்சிபுரம் பகுதியைச் சேர்ந்த புண்ணியகுமார் பகிரதன் (வயது16) என்ற மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றொரு இளைஞன் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.