பாகிஸ்தானில் உள்ள மசூதி ஒன்றில் நேற்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் பொலிஸ் அதிகாரி உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
பளுசிஸ்தான் மாகாணத்தின் குவெட்டா நகரில் உள்ள மசூதியில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரார்த்தனையில் ஏராளமானோர் பங்கேற்றிருந்தனர்.
அப்போது அங்கு குண்டு வெடித்தத்தில் பொலிஸ் உயரதிகாரி உட்பட 15 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 20 பேர் கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. தற்கொலை குண்டுதாரி மூலம் இத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது.