சற்றுமுன் எதிர்க்கட்சித் தலைவரை அறிவித்தார் சபாநாயகர்!

சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக உத்தியோகபூர்வமாக அறிவித்தார் சபாநாயகர். ஐக்கி தேசியக் கட்சியின் எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாசவை சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார்.

8 ஆவது நாடாளுமன்றத்தின் 4 ஆவது கூட்டத் தொடர் ஜனாதிபதி தலைமையில் இன்று காலை ஆரம்பமானது. இதன்போதே இவ் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிக்கான ஆசன வரிசையில் சஜித் பிரேமதாசவுக்கு எட்டாவது இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அது எதிர்கட்சித் தலைவரின் ஆசனமாகும்.

சிரேஷ்டத்துவத்தின் அடிப்படையில் ஏழாவது ஆசனம் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
எனினும் ரணிலின் விசேட கோரிக்கைக்கு அமைய அவருக்கு ஒன்பதாவது இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.



Previous Post Next Post