யாழில் வங்கி முகாமையாளரின் காருக்கு தீ வைப்பு! (படங்கள்)

யாழ்ப்பாணத்தில் சமுர்த்தி வங்கி முகாமையாளர் ஒருவரின் காருக்கு இனந்தெரியாத நபர்களினால் தீ வைக்கப்பட்டுள்ளது.

கல்வியங்காட்டில் உள்ள அவரது வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்கே நேற்று இரவு தீ வைக்கப்பட்டுள்ளது.

கோப்பாய் சமுர்;த்தி வங்கி முகாமையாரான வரதராஜா கேதீஸ்வர சர்மா என்பவரின் கல்வியங்காட்டில் உள்ள வீட்டுக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத இருவர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்கு தீ வைத்து விட்டுத் தப்பி ஓடியுள்ளனர்.

இருப்பினும் சம்பவத்தை உணர்ந்த வீட்டாரும் அயலவர்களும் இணைந்து தீயைக் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

நேற்றிரவு 11.30 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றதாகவும் இதன்போது வீட்டார் உறக்கத்தில் இருந்ததாகவும் தெரியவருகின்றது.

மேலதிக விசாரணைகளைக் கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






Previous Post Next Post