யாழ்ப்பாணம், பருத்தித்துறை புலோலியில் உள்ள வீடொன்றில் கத்தி முனையில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நேற்றிரவு 7 மணியளவில் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் கத்தி முனையில் எட்டுத் தங்கப் பவுண் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
வீட்டில் உரிமையாளர்கள் இருந்தபோது, உள்நுழைந்த மூன்று கொள்ளையர்கள் முகத்தை துணிகளால் மறைத்துக் கட்டிக் கொண்டு கத்தியைக் காட்டி அச்சுறுத்தி அவர்கள் அணிந்திருந்த நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக பருத்தித்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது போன்ற மூன்று சம்பவங்கள் இப் பகுதியில் அண்மைக் காலத்தில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.