யாழில் கள்ள மண் கடத்தியவர்களுக்கு மக்களால் நடந்த கதி! (வீடியோ)

சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களை மக்கள் துரத்திச் சென்றதால் மணலை வீதியில் பறித்து விட்டுக் கடத்தல்காரர்கள் தப்பிச் சென்றனர்.

இச் சம்பவம் யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் இன்று நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு மணல் ஏற்றி வந்த கனரக வாகனம் இலங்கைத் தொலைத் தொடர்பு நிலையத்தின் வயர்கள் மற்றும் தூண்கள் என்பவற்றையும் சேதப்படுத்திச் சென்றுள்ளது.
அரியாலை நெடுங்குளம் சந்திப் பகுதியில் சுமார் 300 மீற்றர் வரையான வீதியில் மணல் பரவி கிடப்பதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

இதனால் யாழ்ப்பாணம் - கண்டி ஏ-9 வீதியூடான போக்குவரத்துக்கள் பத்து மணித்தியாலத்துக்கும் மேல் தடைப்பட்டிருந்தது.

இருந்தும் மணல் ஏற்றி வந்த வாகனம் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



Previous Post Next Post