பருத்தித்துறை முனைக் கடலில் குளித்துக் கொண்டிருந்த கிளிநொச்சியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி பன்னங்கண்டியைச் சேர்ந்த இராமசாமி மாணிக்கராசா (வயது-36) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
மரண வீடு ஒன்றுக்குச் சென்ற பின்னர் கடலில் குளிக்கச் சென்றபோதே கடல் சுழியில் அகப்பட்டு உயிரிழந்துள்ளார்.
குளித்துக் கொண்டிருந்த சமயம் கடல் அலையில் அகப்பட்டுக் காணாமல் போன நிலையில் கடற்படையினரும் அப் பகுதி இளைஞர்களும் இணைந்து தேடிய போது அவர் சடலமாக மீட்கப்பட்டார்.
சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.