யாழில் பெற்றோலுக்குத் தட்டுப்பாடு! முண்டியடிக்கும் மக்கள்!! (வீடியோ)

யாழ்ப்பாணத்தில் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு விடும் என்ற அச்சத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் வரிசையில் நின்று தங்கள் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பி வருகின்றனர்.

மத்திய கிழக்கில் ஈரான்-அமெரிக்க போர்ப் பதற்றம் அதிகரித்த நிலையில் எரிபொருளுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டு விடும் என்ற அச்சம் காரணமாக யாழ்.குடாநாட்டின் பல பகுதிகளிலும் நேற்று இரவு வரை நீண்ட வரிசையில் மக்கள் எரிபொருளுக்காக காத்திருக்கின்றனர்.

யாழ்.நகரம், புறநகர்ப் பகுதிகள் மற்றும் நெல்லியடி பகுதிகளில் நேற்று வரை பெருமளவான மக்கள் இவ்வாறு வரிசையில் நின்று எரிபொருள் நிரப்புகின்றனர்.

எரிபொருள் தொடர்பான எந்தத் தட்டுப்பாடும் இல்லாத நிலையில் இதுபோன்ற செயற்பாடுகள் செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி விடும் ஆபாயம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.





Previous Post Next Post