பேருந்திற்குள் அகப்பட்ட மாணவன் நசுயுண்டு உயிரிழப்பு! (படங்கள்)

இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தில் அகப்பட்டு நசுயுண்டு மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரியில் உயர்தரத்தில் கலைப் பிரிவில் கல்வி பயிலும் மாணவனே இவ்வாறு உயிரிழந்தவர் அவார்.

இந்த விபத்து இன்று மாலை விளக்குவைத்தகுளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் அதேயிடத்தைச் சேர்ந்த எஸ்.பானுஜன் என்ற மாணவனே உயிரிழந்தார்.

பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றி விட்டு வீடு சென்ற மாணவன், மீண்டும் ஓமந்தைப் பகுதிக்குச் சென்ற நிலையிலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

மாணவனின் சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை ஓமந்தைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




Previous Post Next Post