பாழைந்த கிணற்றுக்குள் இருந்து தொப்புள் கொடியுடன் சிசு ஒன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
புங்குடுதீவு 11 ஆம் வட்டாரப் பகுதியில் உள்ள பாழைந்த கிணற்றிலிருந்து சிசுவின் சடலம் அழுகிய நிலையில் நேற்று மீட்கப்பட்டது என்று ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் நிலைய தொலைபேசி இலக்கத்துக்கு கிடைத்த தகவலுக்கு அயை இந்தச் சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குழந்தை பிறந்து 2 நாட்கள் இருக்கும். மீட்கப்பட்ட சடலத்தில் இருந்து தொப்புள் கொடியும் காணப்படுகின்றது. கொலை செய்யப்பட்டு யூரியா பையில் சுற்றப்பட்ட நிலையில் சிசு கிணற்றில் போடப்பட்டுள்ளது.
எனினும் யூரியா பையுடன் வேறு வேறாக கலண்ட நிலையில் சடலம் காணப்பட்டது. நேற்றுக் காலை அந்தப் பகுதிக்கு அருகில் உள்ள பற்றைக் காட்டுக்குள் சென்ற ஒருவர் துர்நாற்றம் வீசுவதைக் கண்டு கிணற்றை எட்டிப் பார்த்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை தட அறிவியல் பொலிஸாரின் உதவியுடன் ஊர்காவற்றுறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை சிசுவின் தாயார் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.