தொண்டமனாறு கடல் நீரேரியில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர்களில் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பருத்தித்துறை புலோலியைச் சேர்ந்த கந்தசாமி கஸ்தூரன் (வயது-26) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
இச் சம்பவம் இன்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றது.
5 நண்பர்களுடன் தொண்டமனாறு கடல் நீரேரியில் குளித்துக் கொண்டிருந்த போதே அவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டார்.
இந் நிலையில் பொதுமக்கள் இணைந்து சுமார் ஒரு மணிநேரமாக அவரைத் தேடினர். எனினும் இளைஞன் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
உயிரிழந்த இளைஞனை அவரது பெற்றோர் அடையாளம் காட்டியதுடன், மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.