உலகை உலுக்கும் கொரோனா வைரஸ்! முன்கூட்டியே தெரிவித்தது பஞ்சாங்கம்!!

சீனாவில் உருவாகி, உலகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கும் உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ் தொடர்பில் முன்கூட்டியே பஞ்சாங்கம் தெரிவித்திருப்பது அதிர்ச்சியளித்துள்ளது.

பழைய பஞ்சாங்கம் என சிலர் அதனைச் சாதாரணமாகச் சொல்வார்களே, அந்தப் பஞ்சாங்கத்தில்தான் இவ்வாறான விபரீதங்கள் நிகழவுள்ளதாக முன்கூட்டியே கணித்திருக்கின்றது.

சுத்த வாக்கிய சர்வ முகூர்த்த பஞ்சாங்கம் என்றொரு பஞ்சாங்க நூலில் கோள்கள் ரீதியான பல்வேறு பலன்களுடன் இந்த வைரஸ் பற்றிய எச்சரிக்கையும் இடம்பெற்றுள்ளது.

“விஷ ஜந்துகள் அதிகமாக இன விருத்தி அடையும், விஷ ஜந்துகளால் மக்களுக்கு அதிக தொல்லைகள் ஏற்படும். ஒரு புதிய வைரஸ் நோய் மேற்கு திக்கில் இருந்து உற்பத்தியாகும் என்று அந்தப் பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் நாக பாம்பிலிருந்து உற்பத்தியானதாகவும், வீட்டு விலங்குகளின் இறைச்சிக் கூடத்திலிருந்து பரவுவதாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.


Previous Post Next Post