ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் தொடர்பில் ஏற்பட்டிருந்த இழுபறி நிலைக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராகத் தொடர்ந்தும் ரணில் விக்கிரமசிங்க செயற்படுவதற்கு கட்சியின் செயற்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இன்று மாலை கட்சி தலைமையகத்தில் கூடிய கட்சியின் செயற்குழு இந்த முடிவவை எடுத்துள்ளது.
இதேவேளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணியின் தலைவராகத் தெரிவு
செய்யப்பட்டுள்ளதுடன், பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கும் செயற்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்தத் தகவல்களை ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவாசம் தெரிவித்துள்ளார்.
இதேதேவளை இந்த செயற்குழு கூட்டத்தை சஜித் பிரேமதாச உட்பட்ட 35 நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறண்கணித்தனர்.
செயற்குழுவில் இருந்து சிலர் நீக்கப்பட்டமைக்கு ஆட்சேபம் தெரிவித்தே இந்தப் புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டது.