யாழ்ப்பாணத்தில் கடுமையான காய்ச்சல் மற்றும் வயிற்றோட்டம் காரணமாக மயங்க விழுந்த தபால் அதிபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவத்தில் பலாலி வீதி, கந்தர்மடத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் சற்குணதேவா (வயது-48) என்ற இரு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
யாழ்ப்பாணம், கந்தர்மடப் பகுதியில் வசித்து வரும் குறித்த குடும்பஸ்தர், யாழ்.தபால் நிலையத்தில் தபால் அதிபராகக் கடமையாற்றி வருகின்றார்.
இவருக்கு கடந்த ஒரு வாரமாக வயிற்றோட்டம் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டிருந்தது. சுகவீனம் அடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.
இந் நிலையில் மீண்டும் அவருக்கு நேற்று முன்தினம் காய்ச்சல் மற்றும் வயிற்றோட்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டில் இயக்கம் அடைந்து வீழ்ந்துள்ளார்.
குடும்பத்தினர் அவரை யாழ்.போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர். எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த இறப்புத் தொடர்பான விசாரணைகளை யாழ்.போதனா வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேமகுமார் மேற்கொண்டார்.