முதலாம் மற்றும் இரண்டாம் வருட மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இத் தாக்குதல் சம்பவத்தில் இரு முதலாம் வருட மாணவர்கள் படுகாயமடைந்த நிலையில் மட்டு.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதல் சம்பவத்தையடுத்து முதலாம் வருட மற்றும் இரண்டாம் வருட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் கால வரையறை இன்றி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கிழக்குப் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
குறித்த பல்கலைக்கழகத்தில் கலைப்பீட முதலாம் ஆண்டு மாணவர்கள வன்முறையற்ற மாணவர் அமைப்பு என பகிடிவதையை இல்லாது ஒழிக்கும் ஓர் அமைப்பை உருவாக்கி செயற்படுத்தி வந்தனர்.
இந் நிலையில் சம்பவ தினமான இன்று பகல் குறித்த அமைப்பைச் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்கள் இருவர் மீது இரண்டாம் ஆண்டு மாணவர்கள் குழுவினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இந் நிலையில் குறித்த தாக்குதல் தொடர்பான காணொளி வெளியாகியுள்ளது. இது இவ்வாறிருக்க புதிய அரசாங்கத்தினால் பகிடிவதைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.