நயினாதீவுப் பிரதேசத்தில் ஆட்கள் இல்லாத வீடுகளுக்குள் புகுந்து வீட்டின் உடமைகளைக் கொள்ளையடித்துச் செல்லும் சம்பவங்கள் அண்மைக் காலமாக அதிகரித்துள்ளதாக அப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
புதிதாக வழங்கப்பட்ட வீட்டுத் திட்ட வீடுகளில் மக்கள் குடிபுகுந்த நிலையில் அவர்களின் பழைய வீடுகளின் ஓடுகள், யன்னல் கதவுகள் போன்றவற்றை திருடர்கள் கழற்றி செல்வதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே இத் திருட்டுச் சம்பவம் தொடர்பில் அப் பகுதி கிராம அலுவலர் மற்றும் பொலிஸார் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.