இலங்கையிலும் கொரோனா வைரஸ்! முதலாவது நோயாளி கண்டறிவு!!

உலகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கும் உயிர்கொல்லி வைரஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதலாவது நோயாளி இலங்கையில் கண்டறியப்பட்டுள்ளார்.

இந்தத் தகவலை சுகாதார மேம்பாட்டு பணியகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இலங்கையில் த ங்கியிருக்கும் சீன நாட்டுப் பெண் ஒருவரே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று அந்தப் பணியகம் அறிவித்துள்ளது.

இன்று (27) வியாழக்கிழமை மாலை பரிசோதனை ஊடாக சீன நாட்டுப் பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அவர் சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஹூபே மாகாணத்திலிருந்து இலங்கைக்கு வருகை தந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

சீன நாட்டுப் பெண் (வயது-43) தற்போது இலங்கை நோயியல் வைத்தியசாலையில் (எச்டிஜ) சேர்க்கப்பட்டுள்ளார்.


Previous Post Next Post