கொக்குவிலில் தங்க நகை என நினைத்து கவரிங்கை அள்ளிச் சென்ற திருடர்கள்!

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் இன்று அதிகாலை 4 மணியளவில் திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கொக்குவில் கிழக்கு, உடையார் லேனின் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த திருடர்கள், அங்கு வைக்கப்பட்டிருந்த கவரிங் நகைகளை தங்க நகைகள் என நினைத்து எடுத்துச் சென்றுள்ளனர். அத்துடன் பணப் பையுடன் இருந்த 3 ஆயிரம் ரூபாயும் திருடப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 4 மணியளவில் வீட்டில் இருந்தவர்கள் உறங்கிக் கொண்டிருந்துள்ளனர். அதேநேரம் வீட்டின் உரிமையாளர் பால் வேண்டுவதற்காக கதவைத் திறந்து விட்டு வெளியில் சென்ற நிலையிலேய இத் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Previous Post Next Post