யாழில் பத்திரிகை ஒன்றின் ஊடகவியலாளர் வீட்டில் வாள்வெட்டு தாக்குதல்!

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றின் ஊடகவியலாளர் வீட்டில் வாள்வெட்டுக் கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.

யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் உள்ள குறித்த ஊடகவியலாளரின் வீட்டுக்கு இன்று துவிச்சக்கரவண்டியில் சென்ற 5 பேர் அடங்கிய குழுவினர் இத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த 31 ஆம் திகதியும் அப் பகுதியில் இதே போன்றதொரு வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், மானிப்பாய் பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




Previous Post Next Post