நெடுந்தீவுக் கடலில் தத்தளித்த தமிழக மீனவர்கள் நான்கு பேரை இலங்கைக் கடற்படை காப்பாற்றியுள்ளது.
தமிழகம் புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து மீன்பிடிக்காகச் சென்ற மீனவர்களின் படகு கடலில் விபத்துக்குள்ளாகிய நிலையில் அதில் பயணித்த மீனவர்கள் கடலில் தத்தளித்த போதே இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.
நேற்று கடலில் ஏற்பட்ட அதிக காற்றினால் குறித்த விபத்து இடம்பெற்றள்ளது. சம்பவத்தில் படகில் பயணித்த நான்கு மீனவர்களும் கடலில் வீழ்ந்து உயிருக்குப் போடிய நிலையில் நீந்தியிருக்கின்றனர்.
சம்பவத்தை அவதானித்த இலங்கைக் கடற்படையினர் அவர்களைக் காப்பாற்றி படகில் ஏற்றி வந்து நீரியல் வளத் திணைக்களத்தினரிடம் ஒப்படைத்திருப்பதாகத் தெரிய வருகின்றது.