சட்டவிரோத மண் அகழ்வுக்காக வந்தவர்கள் தங்கள் டிப்பர் வாகனத்தையும் கைவிட்டுத் தப்பியோடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
வடமராட்சி குடத்தனை பொற்பதிப் பகுதியில் நேற்றிரவு குழப்பம் விளைவித்த நபர்களே இவ்வாறு டிப்பர் வாகனத்தை கைவிட்டுத் தப்பித்துள்ளனர்.
நேற்று வாள்களுடன் போதையில் டிப்பர்களில் மணல் ஏற்ற வந்த குழு அப் பகுதி மக்களையும் மிரட்டியுள்ளது. இதனையடுத்து பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் காங்கேசன்துறையில் இருந்து விசேட பொலிஸ் குழுவினர் அங்கு சென்று சுற்றிவளைக்க முற்பட்ட போது பொலிஸாரினை நோக்கி கற்களால் தாக்குதல் நடத்தப்பட்டது.
சம்பவத்தையடுத்து சிறப்பு அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டிருந்த நிலையில் அவர்;கள் வந்த டிப்பர் வாகனத்தைக் கைவிட்டு விட்டுத் தப்பி ஓடியுள்ளனர்.
வாகனத்தை இயக்க முடியாத அளவுக்கு அதன் செயற்படும் திறனைத் துண்டித்து விட்டு அவர்கள் தப்பி ஓடியதால் பொலிஸாரினால் குறித்த வாகனத்தை எடுத்துச் செல்ல முடியவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே அந்;தக் கிராமத்தில் வீதியில் நின்றிருந்த மோட்டார் சைக்கிள்களை பொலிஸார் ஏற்றிச் சென்றதாக மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.