புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் 5 இராணுவத்தினர் உட்பட 21 பேர் சிறப்பு அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் லெப்டினட்ட கேணல் தர அதிகாரி உட்பட 5 இராணுவத்தினர், 13 சிங்களவர்கள் மற்றும் 3 தமிழர்கள் அடங்குகின்றனர்.
கிளிநொச்சி-தருமபுரம், இராமநாதபுரம் என்ற இடத்தில் இன்று (09) அதிகாலை இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டதாகத் தெரிவித்து அதி நவீன ஸ்கானர் கருவிகளைப் பயன்படுத்தி புதையல் தேடப்படுவதாக சிறப்பு அதிரடிப் படையினருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
இதுதொடர்பில் சிறப்பு அதிரடிப் படையினரின் அணி ஒன்று முன்னெடுத்த தேடுதலில் இந்த 21 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் அனைவரும் தருமபுரம் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்து கைப்பற்ப்பட்ட அதி நவீன ஸ்கான் கருவிகளும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.