முல்லைத்தீவுப் பகுதியில் சற்றுமுன் குண்டுவெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதுடன், அதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
முல்லைத்தீவு சிலாவத்தை மாதிரி கிராமம் பகுதியிலேயே இந்தக் குண்டுவெடிப்புச் சம்பம் இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவில் மோட்டார் குண்டு ஒன்றை கோடரியால் கொத்தி பிரிக்க முற்பட்ட இரும்பு வியாபாரி ஒருவரே இவ்வாறு படுகாயம் அடைந்த நிலையில் முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிலாவத்தை மாதிரிக் கிராமத்தில் வசிக்கும் சூசைப்பிள்ளை புலேந்திரன் (வயது 42) என்பவர் இரும்பு வியாபாரத்தினை மேற்கொண்டுவருகின்றார்.
அவ்வாறு சேகரிக்கப்பட்ட இரும்புகளில் மோட்டார் வெடி குண்டு ஒன்றை கோடரியால் கொத்திப் பிரிக்க முற்பட்டபோது அது வெடித்துச் சிதறியுள்ளது.
சம்பவத்தில் ஒருகாலை முற்றாக இழந்த அவர் இன்னொரு காலிலும் கை விரல்களிலும் சிதைவுகளை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணைகளை பொலிஸாரும், இராணுவத்தினரும் முன்னெடுத்துள்ளனர்.