வலம்புரிப் பத்திரிகையின் மீது எழுவைதீவு கிறிஸ்தவர்கள் தாக்குதல் நடத்த முற்பட்டது ஆபத்தானது எனக் குறிப்பிட்டு யாழ்.ஆயர் இல்லத்திற்கு முன்பாக சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் இந்தப் போராட்டத்தை இன்று ஆரம்பித்துள்ளார்.
யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கில் மத வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக இங்குள்ள கிறிஸ்தவர்களினால் இது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதனால் சைவத் தமிழ் மக்கள் பல்வேறு பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றனர். ஆகையினால் தொடர்ந்தும் இவ்வாறான பாதிப்புக்கள் ஏற்படுவதற்கு இடமளிக்க முடியாது.
குறிப்பாக கிறிஸ்தவர்களால் மேற்கொள்ளப்படுகின்ற சைவத் தமிழ் மரபுகளை மாற்றுகின்ற நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும். இதற்கு இங்குள்ள யாழ்.ஆயர் இல்லம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோருகின்றோம்.
சைவத் தமிழ் மரபு அழிக்கப்படுவதைக் கண்டித்தும் மத வன்முறைகள் தலைதூக்க இடமளிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தியும் கிறஸ்தவர்களால் மேற்கொள்ளப்படும் அச்சுறுத்தும் செயற்பாடுகளை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுமே இந்த ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்தள்ளதாகத் தெரிவித்துள்ளார்.