![]() |
Dr. த.சத்தியமூர்த்தி |
இன்றைய தினம் யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் பரவும் தகவலால் யாரும் அச்சமடையத் தேவையில்லை. குறித்த வைரஸ் பரவிய சந்தேகத்தில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற சிலர் வருகின்றபோதும் அவர்களில் எவருக்கும் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
சிகிச்சைக்கு வருபவர்களின் இரத்த மாதிரிகள் பொரளை வைத்திய ஆய்வுகூடத்திற்கு அனுப்பப்பட்டு பரிசோதிக்கப்படுவதாகவும், எவருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்படவில்லை என்றும் தெரிவித்தார்.