முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர், சிகிச்சைக்காகச் சென்ற பெண்ணிடம் முறை தவறி நடக்க முற்பட்ட குற்றச்சாட்டுத் தொடர்பில் வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளரால் முள்ளியவளைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சென்ற பெண்ணிடம், அங்கு பணியாற்றும் மருத்துவர் பாலியல் ரீதியில் தவறாக நடக்க முற்பட்டார் எனக் குற்றஞ்சுமத்தப்பட்டது.
வடக்கு மாகாண ஆளுநரின் கவனத்திற்கும் இந்த விடயம் கொண்டு செல்லப்பட்டது. அவரின் பணிப்புக்கு அமைவாக கொழும்பு சுகாதார அமைச்சு மற்றும் வடக்கு மாகாண சுகாதார அமைச்சு என்பன முதல்கட்ட விசாரணைகளை முன்னெடுத்திருந்தன.
நிர்வாக நடைமுறைக்கு அமைவாக, முதல் கட்ட விசாரணையின் பின்னர் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட வேண்டும் என்பதற்கு அமைவாக கடந்த வெள்ளிக்கிழமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மாகாண சுகாதாரப் பணிப்பாளர் முறைப்பாட்டை மேற்கொண்டுள்ளார்.