யாழ்ப்பாணத்தில் மின்சாரம் தாக்கி 17 வயதுச் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்.நகரில் இயங்கும் கிறீம் ஹவுஸ் ஒன்றில் பணியாற்றும் சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் உள்ள கிறீம் ஹவுஸ் ஒன்றில் நேற்று முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சங்கானை, தேவாலய வீதியைச் சேர்ந்த நல்லகுமார் நிசாந்தன் (வயது -17) என்ற சிறுவர் தொழிலாளியே உயிரிழந்தார்.
கட்டடத்தின் நான்காம் மாடியில் உருளைக்கிழங்கு வெட்டும் உபகரணத்தில் சிறுவன் வேலையில் இருந்துள்ளார். அந்த உபகரணத்துக்கான மின் இணைப்பு வயரில் பழுது இருந்துள்ளது. அதனை சிறுவன் மிதித்துள்ளான்.
இதையடுத்து மின்சாரம் தாக்கி மயக்கமடைந்த நிலையில் சிறுவன் வைத்தியசாலைக்கு எடுத்துவரப்பட்ட போதும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று இறப்பு விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் திடீர் இறப்பு விசாரணையை நமசிவாயம் பிரேம்குமார் முன்னெடுத்தார். சடலம் உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.